இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
குரகல விகாரை தொடர்பான பேச்சு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் நீதிவான் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.
இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.
புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்
Leave Comments